நாக சைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்தார். அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருந்து ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யா வெளியிட்டுள்ள பதிவில், விவகாரத்து தொடர்பாக பல்வேறு ஆதரமற்ற கிசுகிசுகள் வந்தபோதும் தமது குடும்பத்திற்காகவும், முன்னாள் மனைவியின் மீதான மரியாதை காரணமாக இதுவரை அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போது விவகாரத்து தொடர்பாக தெலங்கானா அமைச்சர் சுரேகா தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் பொய்யானது, கேலிக்கூத்தானது என தெரிவித்துள்ளார். பெண்களின் ஆதரவு கொண்ட அமைச்சர், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை ஊடகங்களின் தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இதுதொடர்பாக நடிகை சமந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைத்துறையில் பல சிரமங்களை கடந்து ஒரு பெண்ணாக போராடிக் கொண்டிருக்கிறேன். அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய விவாகரத்து பரஸ்பரமானது. தயவு செய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெற வேண்டும். உங்களின் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டே இருக்கிறேன். அப்படியே இருக்கவே நான் ஆசைப்படுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
Read more ; அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!!