ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Resolver பணிகளுக்கு என மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 63 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகத்தில் அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பு. விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வம் உள்ள நபர்கள் 20.10.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
For More Info: https://recruitment.bank.sbi/crpd-rs-2022-23-19/apply