fbpx

12 ஆம் வகுப்பு மாணவர்கள் காதல்.. பெற்றோர் மறுத்ததால் தற்கொலையில் முடிந்த சோகம்..!

உத்தரபிரதேச மாநில பகுதியில் உள்ள மகாராஜ் கஞ்சில் ஒரே கிராமத்தில் வசிக்கும் 12 வகுப்பு மாணவனும், சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள நினைத்து பெற்றோரிடம் தெரிவித்தனர். 

சிறுமி மைனர் என்று கூறி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதனால் மனமுடைந்த இருவருமே பள்ளி வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டான். இதனை தொடர்ந்து மாணவிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். 

இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

#திருச்சி: கோழி இறைச்சி சாப்பிட்ட பெண் பரிதாப உயிரிழப்பு..!

Fri Jan 20 , 2023
திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். வேலை செய்பவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோனிகா(19) என்ற இளம் பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார்.  சம்பவத்தன்று கோனிகா கோழி இறைச்சி சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த உணவு ஒற்றுக்கொள்ளாமல் வாந்தி எடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை […]

You May Like