உத்தர பிரேதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தின் பிந்துவா கொட்வாளி பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து, சிறுமி தனது தந்தை, தாத்தா மற்றும் மாமா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த ஆண்கள் மூன்று பேரும் சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த குற்றவாளிகள் சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் திட்டத்தின் படி, குற்றவாளிகள் மூவரும் கடந்த டிச.22 அன்று சிறுமியை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் சிறுமி அதிலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். பின்னர் அவர் திப்பியாப்பூர் பகுதியிலுள்ள தனது உறவுக்காரப் பெண் ஒருவரின் வீட்டிற்க்கு சென்று அங்கு தஞ்சமடைந்துள்ளார். அவர் அங்கு தனக்கு நடந்ததை எல்லாம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவுக்கார பெண், அம்மாநில காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தை, தாத்தா மற்றும் மாமாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, குற்றவாளிகள் மூன்று பெரும் சிறுமியின் தாயாரையும் இதேப்போல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
Read more: உங்கள் வங்கிக் கணக்கை ரிசர்வ் வங்கி முடக்கப் போகிறதா..? தீயாக பரவும் தகவல்… உண்மை என்ன..?