fbpx

“சார் என்ன தொடாதீங்க” கதறி அழுத சிறுமி; நம்பி வந்த சிறுமிக்கு ஆசிரியர்கள் செய்த கொடூரம்..

சத்தீஸ்கர் மாநிலம், மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதான இவர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் இவர், பள்ளி முடிந்து மாலை நேரத்தில், தனியார் மையத்தில் கணினி பயின்று வந்துள்ளார். இவர் தனது பள்ளியிலும் நன்றாக படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி வழக்கம் போல், தனது கணினி வகுப்பை முடித்து விட்டு வீட்டிற்க்கு திரும்பியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மேகாவின் பள்ளி ஆசிரியர் ஒருவர், தான் வந்து வீட்டில் விடுவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியும், ஆசிரியருடன் சென்றுள்ளார். ஆனால், அந்த ஆசிரியர், மேகாவை வேறு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் அழைத்து சென்ற வீட்டில், பள்ளி முதல்வர், பள்ளி ஆசிரியர் ஒருவர் மற்றும் வனப்பாதுகாவலர் ஆகிய மூன்று பேர் இருந்துள்ளனர்.

மேலும் அவர்கள், மேகாவை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்த அவர்கள், இதுபற்றி யாரிடமாவது கூறினால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 22ஆம் தேதி சிறுமி மளிகை பொருட்கள் வாங்க தனியாக வெளியே சென்றுள்ளார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அங்கு வந்துள்ளார். இதையடுத்து, அவர் சிறுமியை மீண்டும் மிரட்டி அதே வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து இரண்டாவது முறையாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த சிறுமி, வேறு வழியில்லாமல் தனது நடந்த கொடுமைகளை பற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் ரவேந்திர குஷ்வாஹா, பள்ளி ஆசிரியர்கள் குஷால் சிங் பரிஹர், அசோக் குஷ்வாஹா, மற்றும் வனப் பாதுகாவலர் பன்வாரி சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Read more: தொப்பையை சுலபமாக குறைக்க வேண்டுமா?? அப்போ தொடர்ந்து இந்த காய் சாப்பிடுங்க..

English Summary

school-girl-was-sexually-abused-by-her-teachers

Next Post

பொது மக்களின் மனுக்களுக்கு 3 நாளில் ஒப்புதல்...! அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு...!

Thu Nov 28 , 2024
Approval of public petitions within 3 days...! Chief Secretary issues action orders to government officials

You May Like