திருவாடானை அருகே, 14 வயதான நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி வசித்து வருகிறார். பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், பள்ளிக்கு தினமும் வேனில் சென்று வருகிறார். இவர் செல்லும் வேனின் டிரைவராக முகமது அஜித் ரகுமான் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று முகமது அஜித் ரகுமான் நிஷாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், அந்த காட்சிகளை எல்லாம் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனால் நிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார். நிஷாவின் பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட டிரைவர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிஷாவை மிரட்டி, உனது உறவினர்களுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி விடுவேன், எனக்கு மூன்று லட்ச ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த நிஷா, தனது வீட்டில் இருந்து 6 1/2 பவுன் தங்க நயையை எடுத்து வந்து முகமது அஜித்திடம் கொடுத்துள்ளார். அதனை அடகு வைத்து முகமது அஜித் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். மேலும், வீட்டில் இருந்த நகை காணவில்லை என நிஷாவின் பெற்றோர் தேடியுள்ளனர். மேலும் இது குறித்து நிஷாவின் தாய், அவரிடம் நகையை குறித்து கேட்டுள்ளார். அப்போது நிஷா, தனக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு பெரும்
அதிர்ச்சியடைந்த நிஷாவின் தாய், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், முகமது அஜித்தை கைது செய்துள்ளனர்..
Read more: முருங்கை ஓகே.. அதென்ன முள்ளு முருங்கை? கொட்டிக்கிடக்கும் பலன்கள்.. இந்த இலையை இப்படி சாப்பிடுங்க..