fbpx

ரெடியா…? சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை முதல் பள்ளி, கல்லூரி திறப்பு…!

சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதே போல கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் திறக்கப்படும். எனவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் அகற்றப்பட வேண்டும். அனைத்து பொதுகழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று மேலாண்மை தொடர்பாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்து ஒருங்கிணைத்தல். குடிநீர் விநியோக நிலையங்கள் மற்றும் கழிவுநீரகற்று நிலையங்களை கணக்கெடுத்து, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதுடன், கூடுதல் பணியாக கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும் ஜெட் ரோடிங் இயந்திரங்கள், அதிக திறன் கொண்ட உறிஞ்சி இயந்திரங்கள் மற்றும் கழிவுநீரகற்றும் கொள்கலன் ஊர்திகளை (sewerage Tankers) ஏனைய இடங்களிலிருந்து வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரியவாறு பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது ‌

Vignesh

Next Post

பேரிச்சம் பழத்தில் இவ்வளவு தீமைகள் இருக்கா.? வாங்க என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.!

Sun Dec 10 , 2023
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு உடலின் ரத்தம் அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின்கள், புரதம், இரும்புச்சத்து, சோடியம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எனினும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல் அதிகமாக பேரீத்தம் பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு வகையான […]

You May Like