fbpx

சாதி பெயரில் பள்ளி, கல்லூரிகள்… ஒரு வாரம் டைம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து, சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? எனவும் பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? எனவும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.”பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க ஓய்வு நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற பரிந்துரைகளை பெற்றது. அவ்வாறு இருக்கும் போது, பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம்?” எனக்கூறிய நீதிபதி பரத சக்ரவர்த்தி ஒருவார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

English Summary

Schools, colleges in the name of caste… One week time..! High Court orders action against Tamil Nadu government

Vignesh

Next Post

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!. திபெத் முதல் பாட்னா வரை உணரப்பட்டது!.

Fri Feb 28 , 2025
Powerful earthquake in Nepal!. 6.1 on the Richter scale!. Felt from Tibet to Patna!.

You May Like