fbpx

தொடர் கனமழை… இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…? ஆட்சியர்கள் அறிவிப்பு…

கனமழை காரணமாக இன்று மதுரை,திண்டுக்கல்,கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் வழங்கி ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். அதேபோல கோவையில் கனமழை காரணமாக என்று அரசு மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் கிராந் குமார் அறிவித்துள்ளார். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளும் இன்று நடைபெறாது என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

கர்நாடகா மறுத்தால் என்ன..? வருண பகவான் கருணை காட்டிட்டாரு..!! மளமளவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்..!!

Thu Nov 9 , 2023
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடியை கடந்துள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பொழியவில்லை. பல ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்று கூறி தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடக அரசு. நீர் வரத்து குறைந்து போனதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35 அடியை எட்டியது. இதையடுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10ஆம் தேதி […]

You May Like