fbpx

’உயிருக்கு ஆபத்தான நிலையில் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகன்’..!! மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கை..!!

சேகர் ரெட்டி மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி. இவரது மகன் சந்திரமவுலி ரெட்டி (வயது 27). இவருக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவரும், தொழில் அதிபருமான சேகர் ரெட்டியின் மகளுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் 2023 ஜனவரி 26ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்ததும், இதனை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாகவும் இருந்தது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக சந்திரமவுலி ரெட்டி தனது திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று கொடுத்து வந்தார். இந்நிலையில், புதுமாப்பிள்ளை சந்திரமவுலி ரெட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

’உயிருக்கு ஆபத்தான நிலையில் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகன்’..!! மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கை..!!

இதற்கிடையே, காவேரி மருத்துவமனை தரப்பில் இருந்து மருத்துவக்குறிப்பு ஒன்று வெளியானது. அதில், கடந்த 18ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சந்திரமவுலி ரெட்டி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.பி.ஆர். பரிசோதனைகள் முடிந்த நிலையில், அவர் கேத் லேப் பிரிவில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டு, இதய தமனியில் ‘ஸ்டண்ட்’ கருவி பொருத்தப்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்து வரும் நிலையில் அவர் கவலைக்கிடமாக இருக்கிறார். அவரை மருத்துவர்கள், செவிலியர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருவீட்டாரும் சோகம் இக்கட்டான இந்த சூழலில் எங்களது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் இருக்கிறது”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில் மணமகனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது இருவீட்டாருக்கும் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இளம்பெண்களே உஷார்..!! வாட்ஸ் அப் காலில் நைசாக பேசி ஆடையை கழற்ற சொன்ன மாணவன்..!! மாணவி செய்த காரியம்..!!

Tue Dec 20 , 2022
வாட்ஸ்அப் வீடியோ காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனியார் மகளிர் கலை கல்லூரியில் வரலாறு 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தினசரி மாநகர பேருந்தில் கல்லூரிக்கு செல்லும்போது, அதே பேருந்தில் பயணிக்கும் ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ படித்து வரும் திருவொற்றியூர் எஸ்.பி கோயில் 1வது […]
இளம்பெண்களே உஷார்..!! வாட்ஸ் அப் காலில் நைசாக பேசி ஆடையை கழற்ற சொன்ன மாணவன்..!! மாணவி செய்த காரியம்..!!

You May Like