fbpx

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி…!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் அவர் இரண்டு வாரத்திற்கும் மேலாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

உங்கள் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வேண்டுமா? உடனே இதை செய்யுங்கள்..

Thu Oct 12 , 2023
குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்த பிறகு அவர்களுக்கு தினமும் வித்யாசமான ஸ்நாக்ஸ் கொடுப்பது சவாலான ஒன்று தான். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த அதே சமயம் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கொடுப்பது மிகவும் கடினம். அப்படி நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு என்ன கொடுப்பது என்று யோசிக்கிறீர்களா?? இனி கவலை வேண்டாம். சுவையான, ஆரோக்கியமான மொறு மொறு முறுக்கு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. முதலில் இஞ்சி, பச்சை மிளகாய், […]

You May Like