fbpx

இனி பெண்களை ஏமாற்றினால் குற்றவாளிகளுக்கு அதோ கதிதான்….! நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதா….!

பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களை மயக்கி திருமணத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆனால், திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல், அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு மிக கடுமையான தண்டனை விதிக்கப்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் நாள்தோறும் நடந்தேறி வருகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் ஒரு புதிய மசோதா தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தோ அல்லது வேலை வாங்கி தருவதாக தெரிவித்தோ, பதவி உயர்வு வாங்கி தருவதாக தெரிவித்தோ ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டால், அதற்கு மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு பெண்ணை திருமணம் செய்யும் நோக்கத்தில் அல்லாமல், நம்பிக்கை வழங்கி, அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டால், அந்த குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, 10 வருடங்கள் வரையிலும், சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதோடு, தொடர்ச்சியாக நாட்டில் பெண்களுக்கு இது போன்று நம்பிக்கை வழங்கி, உடலுறவு வைத்துக் கொண்டு ஏமாற்றும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்ற நிலையில், இது போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல், கூட்டு பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, 20 வருடங்கள் வரையில், சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிப்பதற்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Next Post

மல்டி அக்கவுண்டு என்ற புதிய வசதியை அமல்படுத்திய வாட்ஸ் அப் நிறுவனம்!… எப்படி பயன்படுத்துவது?

Sun Aug 13 , 2023
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மல்டி அக்கவுண்டு என்கிற புதிய அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. செயலியை அப்டேட் செய்பவர்களுக்கு இந்த புதிய அம்சத்தை உடனடியாக பயன்படுத்த முடியும். தொழில்நுட்ப பயன்பாட்டில் ஏற்படும் தேவைகளை அவ்வப்போது அப்டேட்டாக வழங்குவது வாட்ஸ் அப் செயலியின் தனித்துவமாகும். அதன்காரணமாகவே பல்வேறு ஆண்டுகள் கடந்தும் தகவல் பரிமாற்ற செயலிகளில் இன்னும் முன்னிலை வகித்து வருகிறது வாட்ஸ் ஆப்.சமீப காலங்களில் வாரத்துக்கு வாரம் வாட்ஸ் […]

You May Like