தன்னுடைய மனைவியை தானே கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி, வீட்டிலேயே மறைத்து வைத்த கணவர், பின்பு குற்ற உணர்ச்சியால் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும், சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சாரம்மாள் என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், சாரம்மாள் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஜான்சனும், சாரம்மாளும் திருமணம் செய்து கொண்டனர்.
சாரம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது ஜான்சனுக்கு தெரியாது. இந்த நிலையில், இருவரும் சேர்ந்து வாழ தொடங்கிய பிறகு, சாரம்மாளின் முதல் திருமணம் குறித்த விவாகரங்களை, ஜான்சன் கேள்விப்பட்டுள்ளார்.
இதனால், அடிக்கடி கணவன் மனைவிக்குள் பிரச்சனை எழுந்துள்ளது. அந்த வகையில், கடந்த 16ஆம் தேதி கணவன், மனைவிக்குள் மீண்டும் இது குறித்து பிரச்சினை எழுந்துள்ளது.
இதில் இருவருக்கும் இடையே, வாக்குவாதம் அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ஜான்சன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார், இதனால், சாரம்மாள் அலறி துடித்து இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, அங்கேயே உயிரிழந்தார்.
இதன் பிறகு, மனைவியின் சடலத்தை, ஒரு சாக்கில் போட்டு, கட்டி வீட்டிற்குள் மறைத்து வைத்தார் ஜான்சன். ஆனால் பின்பு அவருக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு காரணமாக, அவர் காவல் நிலையத்தில் சரணடைந்து, மனைவியை கொலை செய்தேன் என்று ஒப்புக் கொள்ள, அதன் பிறகு, ஜான்சனின் வீட்டிற்கு வந்த காவல் துறையினர், அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜான்சனின் மனைவி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், சாரம்மாள் ஏற்கனவே தனக்கு திருமணம் நடந்து விட்டது என்பதை மறைத்து, ஜான்சனை திருமணம் செய்ததும், முதல் திருமணத்தில் சாரமாளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்பதும் தெரிய வந்ததால், ஆத்திரத்தின் காரணமாக, ஜான்சன் இந்த கொலையை செய்திருக்கிறார் என்ற விவரம் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. அதன் பிறகு, காவல்துறையினர் ஜான்சன் மீது, வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.