பொதுவாக, பல நபர்களுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து, போன் கால் வருவதும், அதனை நம்பி, அவர்கள் கேட்கும் விவரங்கள் அனைத்தையும் அந்த மர்ம நபர்களிடம் பொதுமக்கள் தெரிவித்து விடுவதும், அதனை வைத்துக் கொண்டு, பொதுமக்களின் வங்கியில் இருக்கும் அனைத்து பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து விடுவதும் வாடிக்கையாகி வருகிறது.
தற்போது ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், வங்கி பலமுறை வாடிக்கையாளர்களை தங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம், வங்கியில் இருந்து பேசுவதாக யார் போன் செய்தாலும், அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன வங்கி நிர்வாகங்கள். அதையும் மீறி, பலர் இது போன்ற மோசடிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
விவரம் அறியாத பாமர மக்களுக்கு தான் இந்த நிலை என்றால், தற்போது தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மனைவிக்கும் அதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய தயாநிதி மாறனின் மனைவியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து, சுமார் ரூ.99,000 கொள்ளையடித்துவிட்டதாக, தற்சமயம் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் மனைவியின் கைபேசி எண்ணுக்கு போன் செய்த மர்ம நபர்கள், ஆக்சிஸ் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து, அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து, சுமார் 99000 ரூபாய் பணத்தை மோசடி செய்திருப்பதாக, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.