fbpx

அதிர வைக்கும் சாலிகிராமம் அப்பார்ட்மெண்ட் சம்பவம்..!! 15 வயது சிறுமியை இரவு முழுவதும்..!! சிக்கிய பெண் ஆடை வடிவமைப்பாளர்..!!

சென்னையில் பெண் சினிமா ஆடை வடிவமைப்பாளர் போக்சோ வழக்கில் கைதாகியிருக்கிறார். என்ன நடந்தது..? எப்படி போலீசில் சிக்கினார்..? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியின் பெற்றோர், விருகம்பாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், ”11ஆம் வகுப்பு படித்து வரும் எங்களது மகளுக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, “உங்கள் மகள் பாலியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே, எங்களது மகளை சீரழித்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகாரில் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்த விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அதாவது பாதிக்கப்பட்ட சிறுமி, வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். அடிக்கடி தன்னுடன் படிக்கும் தோழிகளுடன் அண்ணாநகரில் உள்ள கஃபேவுக்கு சென்று டீ, ஸ்நாக்ஸ் சாப்பிடுவாராம். அங்கு பெருங்களத்தூரை சேர்ந்த பிரதிஷா ஆதிரா என்ற பெண்ணும், தன்னுடைய ஆண் நண்பர்களுடன் வருவாராம். சினிமாவில் காஸ்ட்டியூம் டிசைனராக வேலை பார்த்து வருகிறார் பிரதிஷா. அந்த கஃபேயில், சிறுமியை சந்தித்துள்ளார் பிரதிஷா.

அப்போது முதல் சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். வாட்ஸ்அப்பிலும் பேசி வந்துள்ளனர். எப்போதுமே சிறுமியிடம் “உன் அழகுக்கு மட்டும் சினிமாவில் சான்ஸ் கிடைத்தால் பெரிய ஹீரோயினாக வருவாய்” என்று சொல்லி ஆசையை தூண்டிக் கொண்டே இருப்பாராம். இந்நிலையில், கடந்த மே 2-வது வாரம் சிறுமியை சந்தித்த பிரதிஷா, மே 13ஆம் தேதி தன்னுடைய பர்த்டே என்பதால், பிறந்த நாள் விழாவுக்கு கட்டாயம் வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். சிறுமியும் தனது பெற்றோரிடம் சொல்லிவிட்டு பார்ட்டிக்கு கிளம்பியிருக்கிறார்.

பின்னர், சாலிகிராமத்தில் ஆன்லைன் மூலம் “ஓஒய்ஓ” என்ற ஆப் மூலம் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் புக் செய்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். இது என்னுடைய காதலன் என்று சோமேஷ் (எ) சோமசுந்தரம் என்பவரையும், ஆண் நண்பர் என்று வில்லியம்ஸ் என்பவரையும் சிறுமிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் பிரதிஷா. பிறகு, செல்போனில் பாட்டு போட்டு, காதலன், ஆண் நண்பருடன் பிரதிஷா டான்ஸ் ஆடியிருக்கிறார். அப்போது சிறுமியையும் தன்னுடன் டான்ஸ் ஆட வில்லியம்ஸ் கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

டான்ஸ் ஆடும்போதே, சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொண்டிருக்கிறார் வில்லியம்ஸ். உடலில் தொட்டு பாலியல் ரீதியாக சிறுமிக்கு ஆசைகளை தூண்டியிருக்கிறார். பிறகு, சிறுமி தன்னுடைய வீட்டிற்கு செல்ல முயன்றார். ஆனால், பிரதிஷாவை தனியாக அழைத்துச் சென்ற வில்லியம்ஸ், சிறுமியுடன் இன்றிரவு தனியாக இருக்க வேண்டும் என்று உதவி கேட்டிருக்கிறார். அத்துடன், மயக்க மருந்து கலந்துகொண்டு வந்த ஸ்வீட்டை சிறுமியிடம் தருமாறும் வில்லியம்ஸ் கேட்டுள்ளார். பிரதிஷாவும், மயக்க மருந்து கலந்த இனிப்பை சிறுமியிடம் கொடுத்துள்ளார்.

அதை சாப்பிட்டதும் சிறுமிக்கு மயக்கம் வந்துள்ளது. பின்னர், அந்த சிறுமி இருந்த அறைக்கு வில்லியம்ஸ் சென்று ரூம் கதவை பூட்டிவிட்டார். இதற்கு பிறகு மயக்க நிலையில் கிடந்த சிறுமியின் ஆடைகளை களைந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் வில்லியம்ஸ். மற்றொரு ரூமில், பிரதிஷாவும், காதலன் சோமேஷுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு, நான் வீட்டிற்கு செல்கிறேன். சிறுமியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பிரதிஷா சென்றுவிட்டாராம். இதற்கு பிறகு, காதலன் சோமேஷ், வில்லியம்ஸ் இருவருமே சிறுமியை அன்றிரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால் சிறுமிக்கு மிகவும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மறுநாள் நடந்ததையெல்லாம் பிரதிஷாவிடம் சொல்லி சிறுமி அழுதுள்ளார். அதற்கு பிரதிஷா, “மரியாதையாக வீட்டிற்கு கிளம்பி போ.. இதை வெளியில் சொன்னால் உன்னை கொன்றுவிடுவோம். இரவு எடுத்த நிர்வாண வீடியோவையும் வெளியிடுவோம்” என்று மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன சிறுமி வீட்டிற்கு வந்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். அத்துடன் கடுமையாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எழுந்து நடக்கவும் முடியாமல் 2 நாட்களாக அவதிப்பட்டுள்ளார்.

அதற்கு பிறகுதான், சிறுமியின் உடலில் பல இடங்களில் காயங்கள், வீக்கங்கள் இருப்பதை குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுமியின் அக்காதான் இதைபற்றி சந்தேகப்பட்டு கேட்டு, விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். பிறகே சிறுமியை மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர். போலீசிலும் புகார் கொடுத்தனர். இந்த புகாரின்பேரில், சிறுமியை அழைத்துச் சென்ற, சாலிகிராமம் அப்பார்ட்மென்ட்டுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.

அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிறுமியை பிரதிஷாவும், காதலனும், ஆண் நண்பரும் சேர்ந்து, புக்கிங் செய்யப்பட்ட அப்பார்ட்மென்ட் ரூமுக்குள் அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இறுதியில், பிரதிஷா, அவரது காதலன் சோமேஷ் மற்றும் ஆண் நண்பர் வில்லியம்ஸ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், போக்சோ பிரிவுகள் பதிவு செய்யப்பட்டன. பிரதிஷா, காதலனுடன் கைதாகியிருக்கிறார். முக்கிய குற்றவாளி வில்லியம்ஸ் தலைமறைவாக உள்ளதால், அவரை பிடிக்க தனிப்படை அமைத்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளார்.

Read More : ரூ.1,000 உரிமைத்தொகை..!! இனி இவர்களுக்கும் கிடைக்கப்போகுது..!! தேதி குறிச்சாச்சு..!! ரேஷன் அட்டையும் ரெடி..!!

English Summary

A female film costume designer in Chennai has been arrested in the POCSO case. What happened..? How did he get caught in the police..? This news package describes the…

Chella

Next Post

கழிவறைக்கு சென்ற 3 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து பலி..!! மக்கள் உடனே வெளியேற உத்தரவு..!! பெரும் பரபரப்பு..!!

Tue Jun 11 , 2024
The incident of 3 women who went to the toilet in the house in Redyarpalayam area and died due to poison gas has caused a shock.

You May Like