fbpx

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு..!! விடியா திமுக அரசுக்கு கண்டனம்..!! சீறிய எடப்பாடி..!!

தமிழக ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், ”தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்று வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.

பொது விநியோகத்தில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு சீர்கெடச் செய்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : அசத்தல் திட்டம்..!! அச்சமின்றி முதலீடு செய்யலாம்..!! மாதம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

English Summary

Edappadi Palaniswami has insisted that all the products should be distributed smoothly without any shortage in the ration shops of Tamil Nadu.

Chella

Next Post

அடேங்கப்பா..!! பிரேம்ஜி - இந்து தம்பதியின் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா..?

Tue Jun 18 , 2024
The information about the age difference between Premji and Hindu has come out.

You May Like