fbpx

2 ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து…! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!

இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; வெளிநாடுகளுக்கு போகும் போது கோட் சூட் அணிவது வழக்கம், எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளாதால் இன்று கோட் சூட் அணிந்துள்ளேன். சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது, அதே போல இந்த மாநாட்டின் மூலம் முதலீடுகளும் மழையாக பெய்யும் என நம்புகிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மத்திய அமைச்சருக்கு பாராட்டுக்கள். பல்வேறு வகையில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அமெரிக்கா, சிங்கபூர் உள்ளிட்ட 9 நாடுகள் பங்குதாரர்களாக இணைந்துள்ளன.

பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு வேகத்தில் தமிழ்நாடு பயணிக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன. நாளைய தொழிற் மாற்றங்களை கணித்து வைத்துள்ளோம். பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதியை தொடர்ந்து சமூக , பொருளாதார அரசியல் முன்னேற்றத்தில் பெண்களை முன்நிறுத்தி வருகிறோம்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழ்நாட்டில் முதலீடு செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அனைவரையும் தமிழக அரசு மதிக்கும் என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் ‌.

Vignesh

Next Post

5 வயது குழந்தைக்கு மூளைக்கட்டி அறுவை சிகிச்சை!… உலக சாதனை படைத்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்!

Sun Jan 7 , 2024
5 வயது குழந்தைக்கு விழித்திருக்கும் கிரானியோட்டமி மூலம் அறுவை சிகிச்சை செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து ANI வெளியிட்டுள்ள செய்தியில், இந்த அறுவை சிகிச்சை, மிகவும் சிறிய குழந்தைக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை என்ற சாதனையை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவத்துறை சாதனையில், ஐந்து வயது சிறுமிக்கு, இடது பெரிசில்வியன் இன்ட்ராஆக்சியல் மூளைக் கட்டியை அகற்றுவதற்காக கான்சியஸ் செடேஷன் நுட்பத்தைப் (Conscious […]

You May Like