பேச்சுலர்கள் எளிதாக சமைக்க கூடிய சிம்பிளான மற்றும் சத்துக்கள் நிறைந்த பூண்டு மிளகு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த சாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் ஊறுவதற்கும் உதவி புரிகிறது மேலும் வாயு தொல்லை மற்றும் அஜீரணம் போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.
இந்த சாதம் செய்வதற்கு சட்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி என்னை நன்றாக சூடானதும் அரை அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் கடுகு சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் 15 பல் நாட்டு பூண்டை நன்றாக இடித்து சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக வறுக்க வேண்டும். இவற்றின் கலர் நன்றாக மாறி அதன் வாசம் எண்ணையில் இறங்கியதும் இவற்றுடன் 1 காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவற்றுடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நெய் சேர்த்தால் நன்கு வாசனையாக இருக்கும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் இவற்றுடன் ஒரு வெங்காயத்தை சேர்த்து நான்கு நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். இப்போது இவற்றில் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுத்ததும் வடித்து வைத்த சோறை இவற்றுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து எடுத்தால் சுவையான மற்றும் சத்துள்ள பூண்டு மிளகு சாதம் ரெடி.