fbpx

#பெரியபாளையம்: அண்ணியை அடித்து கொன்ற வாலிபர்.. குடும்பத்தையே இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தலைமுறைவு..!

பெரியபாளையம் பகுதியில் உள்ள திராவிட பாலு எனபவர் திமுகவின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒன்றியச் செயலாளராகவும் இருந்தவர். இவர் கடந்த 2013ம் ஆண்டு பெட்ரோல் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதையடுத்து எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலு பதவி வகித்து வருகிறார். இதனால் இறந்த திராவிட பாலுவின் மகன் முருகன் (42) வீட்டுக்குள் சத்திய வேலுவின் மகன் புவன்குமார் என்கிற விஷால் புகுந்து பிரச்சினை செய்துள்ளார். 

அப்போது அவரது அண்ணன் முருகன், மனைவி ரம்யா (32), பெரியம்மா செல்வி (52), முருகன் மகன் கருணாநிதி (15) ஆகியோரை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கிவிட்டு ஓடினர். பின்னர் அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த ரம்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், காயமடைந்த செல்வி, முருகன், கருணாநிதி ஆகிய 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரம்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு, சொத்து தகராறு, வேறு ஏதேனும் காரணங்களால் கொலை நடந்ததா என பெரியபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள புவன்குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

ஜஸ்ட் மிஸ்..!! லாரி ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் உயிர் பிழைத்த வாகன ஓட்டிகள்..!! நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ..!!

Tue Jan 3 , 2023
தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் விபத்திற்குள்ளாகி மரணிக்காமல் தப்பித்த நபர்களின் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.  தேனீக்களை போல சுறுசுறுப்புடன் இயங்கும் சமூக வலைதளங்களை நாம் அன்றாடம் தவறாது பயன்படுத்தி வருகிறோம். அதில், இருக்கும் பல விஷயங்கள் நம்மை வியக்கவைக்கும். பொதுவாக லாரி ஓட்டுனர்கள் என்றாலே ஏளனமாக பார்க்கும் காலங்கள் மலையேறி, அவர்களை மதிக்கும் சூழல் தொடங்கிவிட்டன. அதற்கு முழு காரணமாக சமூக வலைதளங்கள் இருக்கின்றன. ஓட்டுனர்களின் கஷ்டத்தையும், துயரத்தையும் அவை விளக்க பெரிதும் […]

You May Like