ஒருவருடன் நமக்கு பிரச்சனை என்று ஏற்பட்டால் அதனை எப்படியாவது சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்வது என்பதுதான் நல்லது. ஆனால் அந்த பிரச்சனை எல்லை மீறி சென்று கோபம் என்பது வந்து விட்டால் பல்வேறு விபரீதங்களை சந்திக்க நேரலாம்.
ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரியே அவனுடைய கோபம் தான். ஒரு மனிதனால் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தி வைக்க முடிகிறது என்றால் நிச்சயம் அவனால் அனைத்தையும் சாதிக்க முடியும். மாறாக ஒரு மனிதனின் கோபத்தை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் நிச்சயமாக எதையும் சாதிக்க முடியாது.
சென்னை நெற்குன்றம் அபிராமி நகர் பத்தாவது தெருவை சேர்ந்தவர் தீனா(28). இவருடைய மனைவி கலைவாணி (25) இவருடைய மைத்துனர் அதாவது, தீனாவின் தம்பி அசோக் (21) இந்த நிலையில், கலைவாணிக்கும், அசோக்கிற்க்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. வழக்கம் போல நேற்று மாலை 5 மணி அளவில் கலைவாணி, அசோக் உள்ளிட்டோரிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட அசோக், கலைவாணியை சரமாரியாக தாக்கி அவரை கத்தியால் தலை மற்றும் கைகளில் கொடூரமான முறையில் குத்தி இருக்கிறார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கலைவாணி, வலியால் அலறி துடித்திருக்கிறார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கலைவாணி ரத்த வெள்ளத்தில் அலறி துடித்திருக்கிறார். ஆகவே அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அக்கம், பக்கத்தினர் வருவதற்கு முன்னர் அசோக் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து, கலைவாணியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அசோக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.