உத்தரபிரதேச மாநிலம், பரேலியை சேர்ந்தவர் 29 வயதான முர்ஷித். இவர் தனது மனைவி ஆனம் மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது மனைவிக்கு, வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முர்ஷித் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில், ஆனமின் கள்ளக்காதலன் இவரது வீட்டிற்க்கு வர தொடங்கியுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்க்கு வரும் போதெல்லாம், வேறு ஒரு நபர் வீட்டிற்க்கு வருவதை, முர்ஷிதின் குழந்தை முர்ஷித்திடம் கூறியுள்ளது.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தை தான் வீட்டிற்க்கு வருவதை தனது தந்தையிடம் கூறுவதால், ஆனமின் கள்ளக்காதலனால் தனது காதலியின் வீட்டிற்க்கு அடிக்கடி வந்து உல்லாசமாக இருக்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனம் மற்றும் அவரது கள்ளக்காதலன், கடந்த 21ம் தேதி, இரண்டரை வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்து புதைத்துள்ளனர். மேலும், முர்ஷித்டம் குழந்தை தவறுதலாக கீழே விழுந்து இறந்துவிட்டதாக ஆனம் கூறியுள்ளார். இதனை முர்ஷித்தும் நம்பியுள்ளார்.
ஆனால் கடந்த 26ம் தேதி, முர்ஷித் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது தான் உண்மை அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முர்ஷித், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், ஆனம் மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்துள்ளனர்.