fbpx

மகன் தற்கொலை, அதிர்ச்சியில் கதறிய தாய்….! இறந்தும் வாழும் மாணவன் எப்படி தெரியுமா….?

செங்கல்பட்டு அருகே, உள்ள கூடலூர் பகுதியில் டியூஷனுக்கு செல்ல பயந்து ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த மாணவன் உயிரிழந்தும் கண் தானம் மூலமாக இந்த உலகில் வாழும் சூழல் அந்த மாணவனின் பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவால் ஏற்பட்டுள்ளது.

அதாவது, மணிகண்டன், சித்ரா தம்பதிகளின் 14 வயது மகன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நாள்தோறும் டியூஷனுக்கு சென்று வருவது வழக்கம் ஆனால் இதற்கு டியூஷன் செல்வதற்கு விருப்பமில்லை. தாய், தந்தை கட்டாயப்படுத்தியதின் பெயரில், அவர் டியூஷனுக்கு சென்று வந்துள்ளார்.

அந்த வகையில், வீட்டிற்கு வந்தவுடன் சித்ரா தன்னுடைய மகனுக்கு சாப்பாடு செய்து கொடுத்து விட்டு, டியூஷன் செல்லுமாறு சொல்லிவிட்டு, துணிகளை துவைப்பதற்காக சென்றுவிட்டார். ஆனால் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தன்னுடைய மகன் அறையில் துப்பட்டாவால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு, பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார் சித்ரா. மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட சித்ரா கதறி துடித்தார்.

இதன் பிறகு அழுது கொண்டு, வெளியே ஓடி வந்த சித்ரா, அருகில் இருந்த நபர்களிடம் தன்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை தெரிவித்து கதறி அழுதுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு நடுவே, தான் டியூஷனுக்கு செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதன் காரணமாகத்தான், தன்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளான் என்று தெரிவித்து, சித்ரா கதறி துடித்தார். அதன் பிறகு என்னுடைய மகனை நான் இழுந்து விட்டேன். ஆனால், அவனுடைய கண்கள் இந்த உலகத்தில் வாழும் என்று தெரிவித்து, அந்த சிறுவனின் கண்களை தானம் கொடுக்க பெற்றோர்கள் சம்மதித்தனர்.

அதன் பேரில், மறைமலைநகர் மருத்துவமனைக்கு அந்த சிறுவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டிருக்கிறது. இறந்தும் வாழும் விதமாக, அந்த சிறுவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை தரப்பில் சந்தேக மரணம் என்று தெரிவித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Post

ஜோதிடத்தை நம்பி காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற இளம்பெண்..!! ஞாபகம் இருக்கா..!! இப்போ என்ன ஆச்சு தெரியுமா..?

Tue Sep 26 , 2023
கன்னியாகுமரியை ஒட்டிய கேரளப் பகுதியில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த இளைஞரான ஷரோன் ராஜ், கிரீஷ்மா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இதற்கிடையே, ஷாரோன் ராஜ் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான புகாரில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கிரீஷ்மாவே திட்டமிட்டு தனது காதலன் ஷரோன் ராஜா கொலை செய்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் பார்த்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளவும், முதல் கணவர் இறந்து விடுவார் என […]

You May Like