கர்நாடகா மாநில பகுதியில் உள்ள முத்தோலில் பரசுராம் குலாலி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் மகன் வித்தல் குலாலி தனது தந்தைக்கு தூக்க மருந்து கொடுத்து பிறகு அவரின் தலையில் இரும்பு கம்பி கொண்டு பயங்கரமாக தாக்கியுள்ளார்.
தந்தை இறந்த பின்பு உடலை 30 துண்டுகளாக வெட்டி, அதனை ஒரு ப்ளாஸ்டிக் பையில் சுற்றி பாழடைந்த போர்வெல் ஒன்றில் வீசியுள்ளார். பரசுராமன் காணாமல் போனதால் மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் வித்தல் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் உண்மை சம்பவம் வெளிப்பட்டது. இது பற்றி வித்தல் கூறியதாவது, என் தந்தைக்கு நான் 5வது மகன். தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரையும் துன்பப்படுத்துவதோடு தினமும் அம்மாவை கொடூரமாக அடிப்பார்.
இவரின் இந்த செயலால் மொத்த குடும்பமமே துன்பத்தில் இருந்தது. இதன் காரணமாகவே நான் அவரை கொலை செய்தேன். பிறகு உடலை முழுவதுமாக போர்வெல்லுக்குள் போட நினைத்தேன். ஆனால் உடலை உள்ளே போடமுடிய வில்லை. அதற்காக உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளே போட்டு விட்டேன்.
அத்துடன் என் தந்தையை கொலை செய்ததில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை என்றும், இனிமேலாவது என் குடும்பத்தினர் நிம்மதியாக இருப்பார்கள் என்றும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.