விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள ராஜகோபாலபுரத்தில் குருசாமி எனபவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் நெல் சாகுபடி செய்து வருகின்றார். இவருக்கு இருமகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தீராத குடிப்பழக்கத்திற்கு அடிமையான குருசாமி, தினமும் குடித்துவிட்டு தன் மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவரது மனைவியின் மீது நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவரைத் தினமும் தாக்கி வந்துள்ளார்.
இதனை கண்ட அவரது மகன்கள் ராஜேந்திரன்(23) மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் குருசாமி மீது கடுங் கோபத்தில் இருந்துள்ளனர். அப்போது வழக்கம் போல் நேற்று இரவும் குருசாமிர மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் ராஜேந்திரன் மற்றும் ராம்குமார் இருவருமே தங்கள் தந்தையைக் கொலை செய்து விடுவோம் என்ற முடிவு எடுத்தனர். முதலில் ராஜேந்திரன் தான் வைத்திருந்த கட்டையால் தந்தையை அடித்தார். மேலும், அவரது கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினார்.
இந்த செயலால் குருசாமி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தார். கொலை செய்த கையோடு ராஜேந்திரன் எனபவர் காவல்துறையில் சரணடைந்து விட்டார். கொலை செய்யத் தூண்டி தலைமறைவான மற்றொரு மகனை காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.