South Indian Bank Limited வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager and Dealer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் CA, CFA அல்லது MBA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது Scale I / II / III (IBA Package) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 25.08.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
For more info: https://drive.google.com/file/d/1RInlNoJBdm2Pw1ZrW7PE20GyFvmjKiso/view?usp=sharing