ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெண் ஒருவருக்கு விவாகரத்தின் போது 1.75 கோடி ரூபாய் வழங்க அவரது கணவருக்கு கட்டளையிட்டு இருக்கிறது நீதிமன்றம். ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் தெற்கு அண்டலூசியா மாகாண நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்தப் பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து வழங்கியதோடு கணவர் அந்தப் பெண்ணுக்கு 204,624.86 யூரோக்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 1.75 கோடி ஆகும்.
இது பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள் அந்தப் பெண் கடந்த 25 வருடங்களாக தங்களது வீட்டில் எல்லா வேலைகளையும் செய்திருக்கிறார். அதற்கு அடிப்படையான ஊதியத்தை கணக்கிட்டு அவருக்கு வழங்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறியிருக்கின்றனர். அதன்படி இரண்டு லட்சம் யூரோக்களை அந்தப் பெண்ணிற்கு வழங்க வேண்டும் எனவும் கணவருக்கு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தைக்கு வயது 18க்கு மேல் இருக்கிறது. 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைக்கு மாத பராமரிப்பு செலவையும் இந்த தந்தையே வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அந்தப் பெண் தன் கணவரின் உடற்பயிற்சி கூடத்தில் இவர் பணி செய்ததாகவும் அதன் பிறகு தன்னை பணி செய்ய வேண்டாம் என கணவர் தடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.