fbpx

அடுத்தவன் சாதனையில் அட்ரஸ் ஒட்டுவது தான் உங்க வேலையா…? முதல்வரை விமர்சித்த அண்ணாமலை…!

அடுத்தவர் சாதனைக்கு அட்ரஸ் ஒட்டுவதே திமுகவின் வேலை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள், மிகுந்த நலிந்த நிலையில் இருந்த போதிலும், பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தமையால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தவறிப் போய்க் கொண்டிருந்தன. இந்த நிலை மாற, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்கள், மத்தியில் காங்கிரஸ் திமுக ஆட்சிக்காலத்தில் இருந்து, தொடர்ந்து போராடி கொண்டிருந்தனர். பல காலமாக இவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக, கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தைச்சேர்ந்த பல்வேறு அமைப்பினர் தமிழக பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து, தங்கள் குறைகளை எல்லாம் எடுத்துக்கூறினர். தொடர்ந்து 40 ஆண்டுகாலமாக போராடியும் திமுக காங்கிரஸ் அரசுகள், அவர்களை உதாசீனப்படுத்தியதை மிகுந்த வலியுடன் எடுத்துக்கூறினர். எங்களை சந்தித்து உங்கள் குறைகளை எடுத்து உரைத்துள்ளீர்கள். பாரதப் பிரதமரின் கவனத்திற்கு இதையெல்லாம் கொண்டுசென்று, அனைவருக்கும் விரைவில், நல்ல பதில் சொல்வேன் என்ற உறுதியை நான் அளித்திருந்தேன்.

அதேபோல புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட கூட்டத்தில், அங்கே திரளாக வந்திருந்த நரிக்குறவர்களின் பலத்த ஆரவாரத்திற்கு மத்தியில், அவர்களின் கோரிக்கையினை விரைவில் மத்திய அரசால் நிறைவேற்றி வைக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட கவனத்திற்கும், மத்திய அரசின் எஸ்.டி. பிரிவினரின் பதிவாளர் கவனத்திற்கும், இம் மனுக்களைக்கொண்டு சென்று, நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்களை பழங்குடியினர் எஸ்.டி. பட்டியலில் சேர்க்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் தமிழ்நாடு பா.ஜ.க-வால் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்களை மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகைசெய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாக கூறியுள்ளார்.

Vignesh

Next Post

மக்களே... கட்டிட அனுமதி விண்ணப்பம் இனி ஆன்லைன் மூலம் மட்டும் தான்...! தமிழக அரசு அதிரடி...

Fri Sep 16 , 2022
கட்டிட அனுமதி விண்ணப்பங்களை இணையதளம்‌ மூலமாக மட்டுமே பெற்று அனுமதி அளிக்கும்‌ நடைமுறையை அமல் படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது‌. நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்‌ அவர்களின்‌ 2022-2023 நிதி நிலை அறிக்கையில்‌ திட்ட அனுமதி, கட்டடம்‌ கட்டுதல்‌ மற்றும்‌ மனைகள்‌ ஆகியவற்றிற்கு ஒப்புதல்‌ வழங்கும்‌ நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக மாநில முழுமைக்கும்‌ ஒற்றைச்சாளர முறை இந்த ஆண்டில்‌ செயல்படுத்தப்படும்‌ என தெரிவிக்கப்பட்டதற்கிணங்க, மனைப்பிரிவு உத்தேசங்கள்‌ இணையதளம்‌ மூலமாக […]

You May Like