பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை மாநில உடற்கல்வி முதன்மை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சமிபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; டெல்லியில் நடைபெற இருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவர்களை புறக்கணித்தது குறித்து, கேள்வி எழுப்பியிருந்தார்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்வதற்குரிய தகவலை சரியாக தெரிவிக்காத தமிழ்நாடு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணணை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தலின் படி, அத்துறையின் இயக்குனர் அறிவொளி சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பாஜக சார்பில் வைக்கப்பட்ட பிரச்சாரத்தில் குறித்து செய்தியாக வந்தும், தமிழ்நாடு அரசுக்கு இதுகுறித்து மீண்டும் நினைவூட்டிய பிறகும், இத்தனை நாட்களும் அதை பற்றி கவலைப்படாமல் இருந்து விட்டு, இன்று,முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து, தான் பணியில் இழைத்த தவறை மறைக்கப் பார்க்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.