fbpx

தூள்..! சிங்கார சென்னை அட்டையின் இருப்பு தொகையை செல்போன் மூலமே தெரிந்துகொள்ளலாம்….!

சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை செல்போனில் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் செல்லாது. அதற்கு மாற்றாக பயணிகள், சிங்கார சென்னை அட்டையை வாங்கி கொள்ள மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மட்டும் இல்லாமல், புறநகர் ரயில்கள் மற்றும் மாநகர பேருந்துகளிலும் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய கொண்டுவரப்பட்ட “சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை” இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும். இதற்காக ஒரு கார்டு அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும்.

இந்த கார்டை மெட்ரோ நிலையம், மின்சார ரயில்களில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஒரு கார்டை ரீசார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதனால் அவர்கள் கவுன்டர்களில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. முதற்கட்டமாக, மெட்ரோ ரயில்களில் மட்டுமே இருந்து வந்த இந்த சிங்காரச் சென்னை பயண அட்டை , இனி மாநகர பேருந்துகளிலும் பயன்படுத்த முடியும். வரும் ஏப்ரல் மாதம் முதல், மெட்ரோ ட்ராவல் கார்டுகள் செல்லாது. அதற்கு மாற்றாக பயணிகள், சிங்கார சென்னை கார்டை (NCMC Card) வாங்கி கொள்ள மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மட்டும் இல்லாமல், மாநகர பேருந்துகளிலும் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை செல்போனில் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

English Summary

Steps are being taken to check the balance of Singara Chennai card on mobile phones

Vignesh

Next Post

"மனிதர்களுக்கு பெரும் ஆபத்து"! கோவிட்-19-ஐ போலவே புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!. விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்!

Sat Feb 22 , 2025
"Great danger to humans"! New virus discovered similar to Covid-19!. Shocking information from scientists!

You May Like