தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பொதுவாக மத்திய மாநில அரசாங்க வேலைகளில் உள்ள ஊழியர்கள் தங்களது வீட்டு பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் வாகனங்களில் அரசாங்கத்தின் முத்திரைகளை பயன்படுத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என பல முறை அரசாங்கமும், காவல்துறையும் கூறியுள்ளது. இந்ந விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால், இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
வாகனத்தில் நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும்…?
வாகனம் வாங்குவோர் அந்த விதிமுறைகளை பின்பற்றி தான் நம்பர் பிளேட் அமைக்க வேண்டும். அதன் படி, வாகனங்களின் முன்னும் பின்னும் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். பின்னால் 35 மி.மீ உயரத்தில் 7 மி.மீ., அகலத்திலும் நம்பருக்குள் இடைவெளி 5 மி.மீ. இருக்க வேண்டும். மூன்று சக்கர வாகனத்தை பொறுத்த வரையில், 40 மி.மீ உயரத்திலும், 7 மி.மீ அகலத்திலும், நம்பருக்குள் இடைவெளி 5 மி.மீ இருக்க வேண்டும்.