கோவையில் ஆடியோ ஒன்றை பெண் போலீசுக்கு அனுப்பி விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், கொசவம்பாளையத்தைச் சேர்ந்தவர் தரணி (43).
தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 30ம் தேதி கோவை வந்தார். காட்டூர் ராம் நகரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் இவரது அறையை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை.
பின்னர் லாட்ஜ் மேலாளர் மற்றும் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது தரணி தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. காட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், தற்கொலைக்கு முன் தரணி தனது மனைவிக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியது தெரியவந்தது. தரணியின் மனைவி கிருபாவதி, திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்தில் காவலராக உள்ளார் உருவாக்கப்பட்டது.
வாட்ஸ்அப்பில் தரணி அனுப்பிய ஆடியோவில், “என்னை மன்னியுங்கள். உங்கள் நகைகளை விற்று செலவு செய்து விட்டேன். உங்கள் சேமிப்பை கெடுத்து விட்டேன். இதனால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. உங்களை விட்டு சாகப்போகிறேன்” என்று பேசியுள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.