fbpx

மாணவர்களே… மாதம் தோறும் ரூ.1,500 உதவித்தொகை…! தேர்வு நடைபெறும் தேதியில் மாற்றம்..‌.! அரசு அறிவிப்பு…

தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். மாநிலம் முழுவதும் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத்தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. தற்பொழுது அதற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு தரப்பில் இருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

90-களின் பிரபல நடிகர் ராமராஜன் மீண்டும் ஹீரோவாக களம் இறங்குகிறார்...! என்ன படம் பாருங்க...?

Mon Sep 19 , 2022
பிரபல நடிகர் ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் 80களின்‌ இறுதியிலும்‌ 90 களின்‌ தொடக்கத்துலும்‌ ரஜினி, கமல்‌ என அனைவருக்கும் இணையாக ஸ்டாராக வலம்‌ வந்தவர்‌ ராமராஜன்‌. சைக்கிளில்‌ வந்து அவர்‌ வீட்டில்‌ படத்திற்கு கால்ஷீட்‌ வாங்கி படம்‌ தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள்‌ இங்கு ஏராளம். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின்‌ நடிகராக வலம்‌ வந்தார் ராமராஜன்‌. அவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் […]

You May Like