தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் ஆதார் ரேஷன் கார்டு இணைக்கும் செயல்முறையை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியுள்ளது. நீங்கள் தமிழ்நாட்டில் நிரந்தர வசிப்பவராக இருந்து, PDS கடையில் இருந்து ரேஷன் பெறுகிறீர்கள் என்றால், பல்வேறு அரசு திட்டங்களை பெற வேண்டும் என்றால், உங்கள் ஆதார் அட்டையை உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும்.
இல்லையெனில் அரசிடமிருந்து இலவச ரேஷன் பெற முடியாது. வேறு சேவைகளையும் பெற முடியாது. ஆதார் ரேஷன் கார்டு இணைப்பு தமிழ்நாடு அரசு மூலம் எளிமையாக்கப்பட்டு உள்ளது. ஆதார் இணைப்பு தொடர்பான அரசாங்க ஆணைகளுக்கு இணங்காததற்கு அபராதம் விதிக்கப்படலாம். இதில் அபராதம் மட்டுமின்றி பிற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
மாநிலத்தில் நடைபெறும் ரேஷன் மோசடிகளைத் தடுக்கவும், அட்டைதாரர்கள் இல்லாதவர்களுக்கு ரேஷன் வழங்கவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. நன்மைகளைப் பெறுதல். ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வருகின்ற செப்டம்பர் 30 வரை வழங்கப்பட்டு இருக்கிறது.
ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
நீங்கள் நியாயவிலை பொருட்கள் வாங்கும் ரேசன் கடைக்கு சென்று உங்கள் ஆதார் அட்டையின் நகல்களை சமர்ப்பிக்கவும்.பிறகு பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை செய்யவும். பிறகு உங்கள் உங்கள் ஆதார் எண் ரேஷன் கார்டுடன் இணைக்கப்படும்.
ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை ரேசன் கார்டுடன் இணைப்பது எப்படி?
முதலில் TNePDS மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.பின்னர் உங்கள் ரேஷன் எண்ணைப் பதிவிட்டு உள்நுழையவும்.அடுத்து ஆதார்-ரேசன் கார்டு இணைப்பு பட்டனை கிளிக் செய்து உங்கள் விவரங்களை உள்ளிடவும்.பின்னர் OTP எண்ணை பதிவிடவும்.இவ்வாறு செய்த பின்னர்உங்கள் ஆதார் எண் ரேச ன் கார்டுடன் இணைக்கப்பட்டு விடும்.
Read more | இனிமேல் தான் ஆட்டம் இருக்கு!. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டேவிட் மில்லர்!