fbpx

மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.1000 திட்டம்…! வரும் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்கள் மூலமாக ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அதில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 1896 இடங்களும், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 640 இடங்களும், பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1270 இடங்களும், பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 280 இடங்களும், அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 450 இடங்களும், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 380 இடங்களும், ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 260 இடங்கள் என பல்வேறு பாடப்பிரிவுகளின் மூலம் கற்பிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ/மாணவியர்களுக்குப் ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்கள் மூலமாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ‘நான் முதல்வன் திட்டம்’ மூலம், வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் இலவசப் பேருந்து வசதிகளும் உள்ளன. திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 27.05.2025 வரை பதிவுசெய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ஒரு மாணவருக்கு ரூ.48/- பதிவுக் கட்டணம் ரூ.2/- மற்றும் SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை, பதிவுக்கட்டணம் ரூ.2/- மட்டும் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணத்தை Debit Card/ Credit Card/ Net Banking/ UPI உள்ளிட்டவற்றின் மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 044 24343106/24342911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Read More: “லெவல் அப்” அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம்..! பள்ளி கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு..!

English Summary

Tamil Nadu government to provide Rs. 1000 scheme to female students…! You can apply till the 27th

Vignesh

Next Post

ஒரு நாளைக்கு எவ்வளவு பாதாம் சாப்பிட வேண்டும்?. நன்மைகள் மற்றும் தீமைகள் இதோ!

Sun May 18 , 2025
How many almonds should you eat per day? Here are the benefits and disadvantages!

You May Like