fbpx

சட்டம் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது ?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பணியிடம் : அரசு உதவி வழக்கு நடத்துநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 51

கல்வித் தகுதி : B.L., Degree  படித்திருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2024 அன்று 36 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Read more ; கொடூரம்.. பாத்திரத்தில் சிறுநீர் கழித்து சப்பாத்தி செய்த பணிப்பெண்..!! கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படும் குடும்பத்தினர்.. அதிர்ச்சி வீடியோ

English Summary

TNPSC has released notification to fill the posts of Government Assistant Case Manager. What are the qualifications for these posts? How to apply? Information including is can be seen in this post.

Next Post

சூப்பர் திட்டம்..!! நாளொன்றுக்கு ரூ.83 முதலீடு செய்தால் நீங்கள் எதிர்பார்க்காத ரிட்டன் கிடைக்கும்..!!

Wed Oct 16 , 2024
LIC is known for its innovative schemes that offer good returns and insurance coverage.

You May Like