டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரவு 10 மணிக்கு பார்கள் மூடப்பட்ட பிறகு திறந்த இடங்களில் மது அருந்துவதை தடுக்க உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி டி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனை நேரத்தை மூடுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக குறைக்க முடியுமா என அரசுக்கு கேள்வி எழுப்பியது.
அரசிடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக் கடைகளைத் திறப்பது மற்றும் மூடுவது என்பது முற்றிலும் அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் தலையிட மனுதாரர்களுக்கு உரிமை இல்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரத்திற்கு முன்பாகவே மூடுவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.