உழைப்பாளர் தினத்தையொட்டி, மே 1-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கட்டுப்பாட்டில் உள்ள மதுபான கடைகள், அதையொட்டி பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி மூடி வைக்க வேண்டும். அன்றை தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்றைய தினத்தில் பார்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உழைப்பாளர் தினத்தையொட்டி, டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக மே 1-ம் தேதி அனைத்து மாவட்டங்களுக்கும் இதேபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More: மே 1-ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூட உத்தரவு…!