Tata steel நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், காலியாக இருக்கின்ற associate Engineer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பயிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். தகுதியான நபர்கள் இறுதி நாள் முடிவடைவதற்குள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் அதே போல ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி 2005 ஆம் ஆண்டுக்குள் பிறந்த நபர்கள் இந்த மணிக்கு விண்ணப்பம் செய்யலாம். தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 17,530 மாத ஊதியமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஆர்வமான மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வரும் 27 8 2023ம் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று சொல்லப்படுகிறது.