fbpx

TCS நிறுவனத்தில் வெளியாகியிருக்கும் வேலை வாய்ப்பு….! அறிவிப்பு இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க….!

நாள்தோறும் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த நிறுவனங்களில் இருந்து, வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இன்று TCS நிறுவனத்தில் இருந்து, வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில், finance & accunting பணிகளுக்கு என்று காலியாக இருக்கின்ற பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பணியில் சேர விரும்புவோர், அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், அல்லது கல்வி நிறுவனத்தில் BA,BBA,BBM,BCS,B,Com, போன்ற ஏதாவது, ஒரு படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் இதற்கான வயது, வரம்பு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிடவும்.

மேலும் இந்த பணியில் சேர சம்பந்தப்பட்ட துறையில், 1 முதல் 12 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, இந்த நிறுவனத்தின் நிபந்தனைகளின் படி, மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், written test,online test, interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யுமாறு, அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வரும் நவம்பர் மாதம் 10ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Download Notification PDF

Next Post

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா….? இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு…..!

Mon Aug 14 , 2023
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, lead engineer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தகுதியான […]

You May Like