இணையதளத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக பலர் பல விதமான காரியங்களை ட்ரெண்டாகி வருகின்றனர். வைரலாக வேண்டும் என்று அவர்கள் செய்யும் சில விஷயங்கள் சமயங்களில் அவர்களின் உயிரையே பறித்து விடுகிறது. சில வீடியோக்கள் நம்மை இரவில் தூங்க விடாமல் செய்யும் அளவிற்கு மயிர்கூச்சரிய வைக்கும் பயத்தை கிளப்புகிறது. அப்படி நம்மை பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
“பாம்பை கண்டால் படையும் நடுங்கும்” என்று ஒரு பழ மொழி உள்ளது. எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் பாம்பை பார்த்தால் கொஞ்சம் வெளவெளத்துதான் போவான் என்பதுதான் இதற்கு அர்த்தம். கூட்டமாக எத்தனை பேர் வந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டுவதற்கு பாம்புகளுக்கு திறன் உள்ளது. பாம்பை கண்டால் பலர் அஞ்சி நடுங்கும் ஈதே உலகில்தான் பலர் பாம்பை வைத்து வித்தை காட்டி பிழைப்பு நடத்துகின்றனர். இன்னும் சிலருக்கு, பாம்பு மிகப்பிடித்த பிராணியாகவும் உள்ளது. ஆனால், லிப் கிஸ் கொடுக்கும் அளவிற்கு யாருக்காவது பாம்பை பிடிக்குமா..? அப்படி ஒரு நபர் பாம்பிற்கு முத்தம் கொடுக்க போய் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், பான்ஸ்வாடா மண்டலத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காராம். இவரது மகன் சிவ ராஜுலு (23 வயது). கங்காராம் தொழில் முறை பாம்புபிடி வீரர். சிவராஜுலுவும் தனது தந்தையிடம் பாம்புகளைக் கையாளுவது குறித்து கற்று தேர்ந்துள்ளார். இந்த நிலையில், நாகப்பாம்பை தனது மகனிடம் கொடுத்து ரீல்ஸ் எடுக்க சொல்லியுள்ளார் தந்தை கங்காராம். அதன்படி, தனது வாய்க்குள் பாம்பை புகுத்தி போஸ் கொடுத்துள்ளார் சிவராஜுலு. அப்போது, அவரது நாக்கில் பாம்பு கடித்துள்ளது.
இதனை உணராமல் சிவராஜுலு வீடியோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். சில நிமிடங்களில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். சிவராஜுலுவை பாம்பு கடித்ததை உணர்ந்த அவரது தந்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரீல்ஸ் மோகத்தால் தந்தையின் கண்முன்னே இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; என்னங்க சொல்றீங்க.. ஹாரன் அடித்தால் சிவப்பு சிக்னல் மாறாதா..!! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த சென்னை போலீஸ்