சில மாதங்களுக்கு முன்னர் திருவிழா ஒன்றில் நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பெண்கள், ஆண்கள் என்று பலரும் அரைகுறை ஆடையுடன் நடனமாடியதும், டபுள் மீனிங் பாடலுக்கு நடனமாடியதும் உயர் நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது.
இதனால், உயர் நீதிமன்றம் இனிவரும் காலங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் இது போன்ற ஆபாச நடனம் ஆடக்கூடாது, இரட்டை அர்த்தமுள்ள பேச்சுக்கள் இருக்கக்கூடாது என்று கடுமையாக தெரிவித்திருந்தது.
ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பொருட்படுத்தாமல், திண்டுக்கல் பகுதியில் ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் அணைப்பட்டி சாலையில் இருக்கின்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நேற்று காலை முதல் ஆடிப்பெருக்கு திருவிழா மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் தான், நேற்று இரவு தனியார் விளம்பரதாரர்கள் சார்பாக ஆடலும், பாடலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்த கலை நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் ஆபாச உடை அணிந்து நடனம் ஆடத் தொடங்கினர்.
மேலும் தொடர்ச்சியாக அனைத்து பாடல்களிலும் ஆபாச நடன அசைவுகளுடன் கூடிய, இரட்டை அர்த்தம். கொண்ட வசனங்களுடன் பாடல்கள் ஒலிக்க தொடங்கியது. அந்த பாடலுக்கு நடன அழகிகள் குத்தாட்டம் போட தொடங்கினர்.
இதை பார்த்த பெண்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அவர்களுடைய நடனம் இருந்தது. இந்த ஆபாச நடனங்களை பார்த்தவாறு மேடைக்கு முன்பே சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் விசில் அடித்தபடி ரசித்துக் கொண்டிருந்தனர்.
நீதிமன்ற தடை உத்தரவைவும் மீறி, ஆபாசமாக நடனமாடிய பெண்களை வேடிக்கை பார்த்த நிலக்கோட்டை காவல் துறையினர், எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பொதுமக்களோடு, பொதுமக்களாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.