fbpx

சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்…! முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட அண்ணாமலை…! ஏற்குமா திமுக…?

தமிழகத்தில் பாஜக கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா..? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பக்கத்தில் சவால் விடுத்துள்ளார்.

சமிபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக தனித்து நின்றால், அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. பாஜக வளர்ந்து வருவதைப் போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுவதாக கூறினார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்ற கருத்துக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் 1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாகவே ஆட்சிக்கு வந்தது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே.

1967லிருந்து, திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியைச் சந்தித்த தேர்தல்களும் உண்டு மு.க.ஸ்டாலின் அவர்களே. யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் மு.க.ஸ்டாலின் அவர்களே. துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது.

பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் பாஜக 2024 ஆண்டு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும். பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன் மு.க.ஸ்டாலின் அவர்களே. கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா..? என சவால் விடுத்துள்ளார்.

Vignesh

Next Post

அப்படி போடு...! திருமணமான கணவனுக்கு இதற்கு உரிமை இல்லை...! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

Sun Jan 1 , 2023
பரிசாக வந்த தங்க நகைகள் பெண்களின் தனிப்பட்ட சொத்து என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்றம் அதை அவர்களின் அனுமதியின்றி எடுக்க கணவர்களுக்கு கூட உரிமையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணத்தின் போது தனக்கு சீதனமாகவும், பரிசாகவும் வழங்கப்பட்ட நகைகளை தன்னிடம் இருந்து பறிக்க முயல்வதாக கூறி மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் […]

You May Like