இந்தியாவில் பல்வேறு வகையான போதைப்பொருள் மற்றும் இரசாயன போதைப்பொருள் பழக்கம் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அவ்வப்போது திருத்தப்படும் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கம் தரும் பொருட்கள் சட்டம், 1985, பிரிவு 2 (viiib)-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி போதை மருந்துகள், மனநிலை மாற்றும் பொருட்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதைக் தடுப்பதற்கான கடுமையான விதிகளை உள்ளடக்கியுள்ளது. விதிகளுக்கு புறம்பான குற்றச்செயல்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதை மருந்து பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமலாக்க முகமைகள் மற்றும் இதர அமைப்புகளிடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக 4 அடுக்கு போதை மருந்து ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. போதைப்பொருள் சட்ட அமலாக்கம் தொடர்பான தகவல்களுக்கென பிரத்யேகமாக இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் கூடுதல் தலைமை இயக்குநர் அல்லது தலைமைக் காவல் அதிகாரி நிலையில் பிரத்யேக போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கான போதைப் பொருள் தடுப்பு மையமாகச் செயல்படவும், பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது.