டெல்லியை சார்ந்த வயதான தம்பதி இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர்களது மருமகளும் அவரது பாய் ஃபிரண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கிழக்கு டெல்லியின் கோகுல்புர் பகுதியைச் சார்ந்தவர் ராதே ஷியாம் மற்றும் அவரது மனைவி வீணா ஆகியோர் திங்கள் கிழமை காலை கழுத்து அறுக்கப்பட்டு தங்களது படுக்கை அறையில் பிணமாக கடந்துள்ளனர். மேலும் அவர்களது வீட்டிலிருந்து நகை மற்றும் 4.5 லட்சம் காணாமல் போய் இருப்பது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து நகைக்காக இந்த கொலை நடந்திருக்குமா? என காவல்துறை விசாரணை செய்தது. காவல்துறைக்கு இந்த வழக்கில் முழு சந்தேகமும் அவரது மருமகளான மோனிகா மீது இருந்தது. மோனிகாவிற்கு திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாகவும் அந்த பாய் பிரண்டுடன் சேர்ந்து தனது மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்து விட்டு அவர்களிடமிருந்து திருடிய பணத்தில் தன் காதலனுடன் சந்தோஷமாக வாழலாம் என திட்டம் போட்டுள்ளார்.
இதற்காக தனது மாமனார் மற்றும் மாமியாரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி ஞாயிற்றுக்கிழமை காலையே அவரது காதலரை வீட்டுக்கு வரவழைத்து இருக்கிறார். காதலரும் வந்து மொட்டை மாடியில் தங்கி உள்ளார். இரவு நேரம் கீழ் இறங்கி வந்து இவர்கள் இருவரும் சேர்ந்து வயதான தம்பதியை கொலை செய்து விட்டு அவர்களிடமிருந்து 4.5 இலட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக அவர்களது மருமகள் மோனிகா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய அவரது காதலனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இச்சம்பவம் தலைநகர் பகுதியில் பெரும் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.