fbpx

குட் நியூஸ்…! அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 14-ம் தேதி வரை நீட்டிப்பு…!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.8.2023 முதல் நடத்தப்பட்டது. சில அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகள் காலியாக உள்ளன.

எனவே, இது வரை விண்ணப்பிக்காத மாணவர்கள், இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் மூலமாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 12 முதல் 14 வரை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA2023-UG VACANCY”- பற்றி பார்க்கலாம் என உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கூறியுள்ளார்..

Vignesh

Next Post

வங்கி மோசடி வழக்கு!… ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு செப்.14 வரை நீதிமன்ற காவல்!

Tue Sep 12 , 2023
ரூ. 538 கோடி வங்கி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனர் நரேஷ் கோயலை செப். 14 வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 848 கோடி கடன் பெற்றார். இதில் ரூ. 538.62 கோடி பாக்கியை செலுத்தாமல் மோசடி செய்ததாக நரேஷ் கோயல் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு […]

You May Like