fbpx

#Alert: 600 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலமாக மாறியது…! இந்த 8 மாவட்டத்தில் கனமழை…!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு – தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடும்.

அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24-ம் தேதி ஒருசில இடங்களிலும், உள்தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

’இந்த 2 நாட்களும் கொஞ்சம் கவனமா இருங்க மக்களே’..!! அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!!

மேலும் 25-ம் தேதி தென் தமிழ்நாடு மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாடு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

26-ம் தேதி தென் தமிழ்நாடு மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

என்ன இது புரியவே இல்லை? இனி கவலை வேண்டாம்..., ஜஸ்ட் ஸ்கேன் பண்ணா போதும்!!!

Fri Dec 23 , 2022
மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா? என்ன மாத்திரை, மருந்து என்று தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இதற்கான வசதியை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. உடல்நிலை சரியில்லை என்று நாம் மருத்துவர்களை அணுகினால் நமது உடல் நிலையை பரிசோதிக்கும் மருத்துவர் மருந்து சீட்டுகளை எழுதி தருவார். இது போன்ற மருந்து சீட்டுகளில் மருத்துவர்களின் கையெழுத்துகள் பெரும்பாலும் புரியவதில்லை. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் கையெழுத்து […]

You May Like