fbpx

#Schools: அனைத்து தனியார் பள்ளிகள் நிர்வாகம் குறித்து… தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!

தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வாகம் செய்வதற்காக அதனை புதிதாக உருவாக்கி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காக்கர் லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை 151 வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் செயல்படும் தனியார் மெட்ரிகுலேஷன், சி பி எஸ் இ,ஐ சிஎஸ்இ, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளையும் நிர்வகிக் தனியார் பள்ளி இயக்குனரகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பள்ளிகள், நர்சரி பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள், ICSE பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளும் இனி தனியார் பள்ளிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ். கொண்டுவரப்பட்டுள்ளது.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தனியார் பள்ளிகள் இயக்குனராகமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தொடக்கப் பள்ளிகளுக்கு என மாவட்ட கல்வி அலுவலர் பதவியிடம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் என்று அழைக்கப்படுவார். மேலும் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டந் தோறும் தனியார் பள்ளிகளை கண்காணிக்க தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் பதவியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடுத்த தலைவலி... தீயாக பரவும் காய்ச்சல்...! வரும் 25-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை...! அரசு அதிரடி உத்தரவு...!

Sat Sep 17 , 2022
குழந்தைகளுக்கு அதிகரிக்கும் காய்ச்சல் காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு குறுகிய காலத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சுகாதாரத்துறை பரிந்துரையை […]

You May Like