வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 68வது படமான கோட் (GOAT) படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு மற்றும் விஜய் காம்போவில் உருவாகும் முதல் படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோட் படம் வெளியாகவுள்ள நிலையில், அடிக்கடி படத்தின் அப்டேட் கசிந்து வருகிறது. தற்போது கோட் படத்தின் கதையே இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இது டைம் டிராவல் கதை என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் கதை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 2004ல் நடந்த ரஷ்யாவின் மாஸ்கோ நகர மெட்ரோவில் ஒரு தீவிரவாதி உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து நடத்திய தற்கொலை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பது தான் விஜய்யின் GOAT பட கதை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் படத்தில் நடிக்க வைத்ததை தொடர்ந்து தற்போது தங்கை பவதாரிணியின் குரலையும் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டதால், விஜய் ரசிகர்கள் GOAT படத்திற்கும், விஜய்யின் கடைசி படத்திற்காகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த விவரம் வெளியாகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; ’மீண்டும் இப்படி ஒரு சம்பவமா’..? தமிழ்நாடு அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்..!!