fbpx

40 வயசு ஆயிடுச்சா.? அப்போ இந்த ஐந்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அவசியம் .!

40 வயதிற்கு மேல் ஆண் பெண் இருபாலரும் முறையான உணவு கட்டுப்பாடு மற்றும் சரியான ஓய்வை பின்பற்றுவதன் மூலம் நோய் நொடியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உதவும். குறிப்பாக பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த வயதில் அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவு முறைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

40 வயதிருக்கும் மேல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம். இரும்புச்சத்துக்கள் நம் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கும் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் கிடைப்பதற்கும் உதவுகிறது. புரோட்டின் அனைத்து வயதினருக்கும் சிறந்த உணவு என்றாலும் 40 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் புரோட்டினை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலின் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 40 வயதிற்கு மேல் செல்களில் ஏற்படும் மாற்றங்களை கட்டுப்படுத்த வைட்டமின் பி எடுத்துக் கொள்ள வேண்டும்.

கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானதாகும். இயற்கையாகவே 40 வயதுக்கு மேல் தாண்டினால் கைகால் வலி மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. இவை வராமல் தடுக்க உணவில் கால்சியம் ஊட்டச்சத்துக் கொண்ட உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு 40 வயதை தாண்டினால் ஹார்மோன் மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வைட்டமின் டி சத்துள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை கட்டுப்படுத்துகிறது.

Next Post

இந்த 4 ராசி பெண்கள் உங்க மனைவியா அமைஞ்சா...! நீங்க தான் ராஜா.!

Wed Dec 6 , 2023
ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரங்கள் அவர்கள் பிறந்த முகத்தைப் பொறுத்து அமைகிறது. சில ராசிக்காரர்கள் நட்சத்திரங்கள் மற்றும் கிரகணங்களின் அடிப்படையில் அதிர்ஷ்டக்காரர்களாக இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவர்கள் தங்களுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தோடு இல்லாமல் தங்களது வாழ்க்கை துணைக்கும் அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்கள் என ஜோதிட குறிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தங்களது கணவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக இருக்கப் போகும் நான்கு ராசிக்காரர்களை பற்றி பார்ப்போம். தன்னிச்சையாக முடிவெடுக்கக் […]

You May Like