கணவனை இழந்த இளம் பெண் ஒருவருக்கு முகநூல் மூலமாக ஒரு ஆண் நபருடைய நட்பு கிடைத்துள்ளது. அந்த நட்பு நாளடைவில், அவருடைய வாழ்வை மட்டும் அல்லாமல், அவருடைய மகளின் சீரழித்த அவலம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
காஞ்சிபுரத்தில், கணவனை இழந்த ஒரு பெண் தன்னுடைய மூன்று குழந்தைகளோடு, தனியாக வசித்து வந்தார். அவருக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (40) என்பவருக்கும், முகநூல் பக்கம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளம் பெண், கணவரை இழந்து தனியாக மூன்று குழந்தைகளோடு ,வசித்து வந்ததால், இவர் நமக்கு ஆதரவாக இருப்பார் என்ற நம்பிக்கையில், தினேஷ்குமார் உடன் பழகி வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
சமூக வலைதளம் மூலமாக பழகி வந்த தினேஷ்குமார், நாளடைவில் காஞ்சிபுரத்திற்கு வந்து, அந்த இளம் பெண்ணுடன் சேர்ந்து, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த இளம் பெண்ணின் குழந்தைகளும் தினேஷ் குமாரை அப்பா என்று அழைத்து வந்துள்ளனர். ஆனால், அந்த இளம் பெண், வேலை நிமித்தம் காரணமாக, வெளியே செல்லும் சமயத்தில் எல்லாம், அவருடைய 15 வயது மகளை, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் தினேஷ்குமார்.
தினேஷ்குமார் தந்தையின் நிலையில், இருந்ததால், இவர் வந்து கூப்பிடும்போது பள்ளி நிர்வாகத்தினரும் அவருடன் அனுப்பியுள்ளனர். இதே போல அடிக்கடி அந்த சிறுமியை பாலியல் தொல்லை செய்து வந்ததால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த சிறுமி, இது பற்றி தன்னுடைய தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து, உடனடியாக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார், அதன் பெயரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தினேஷ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.